கோவை பங்கஜா மில்ஸ் சாலையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் ஆபரேஷன் இன்ஃபினிட்டி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவையை இணைக்கும் இந்தியாவின் முதல் இரு நகர ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நெட்வொர்க்கை துவங்கியது இம்மருத்துவமனை.

இரைப்பை குடலியல் மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சைகளில், இந்தியாவின் முன்னோடி மருத்துவமனை என்று பெயரை பெற்றுள்ள ஜெம் மருத்துவமனை, தற்பொழுது ஆபரேஷன் இன்ஃபினிட்டி என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. பெருநகர எல்லைகளைக் கடந்து, நிகல் நேர மருத்துவக் கூட்டு உழைப்பு, மற்றும் உயர்தர மருத்துவ வசதிகளை, நோயாளிகள் எளிதாக பெற வேண்டும் என்ற நோக்கில், உருவாக்கப்பட்டு, இந்தியாவின் முதல் இரு நகர ரோபோடிக் அறுவை சிகிச்சை நெட்வொர்க் இதுவாகும். இத்திட்டம் சென்னை மற்றும் கோவையில் உள்ள ஜெம் மருத்துவமனைகளில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை உள்கட்டமைப்பை தடையின்றி இணைகின்றது எனவும், இதன் மூலமாக நிபுணத்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், எந்த ஒரு கால தாமதமும் இல்லாமல் நேரலை வழிகாட்டுதல்களை வழங்கிட முடியும் எனவும், நோய்களை கண்டறியவும், தரவுகளை பகிர்ந்து கொள்ளவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளில், தூரத்தில் இருந்து இணைந்து செயல்பட முடியும் என தெரிவிக்கபட்டுளள்து. இந்த திட்டம் குறித்து ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி பழனிவேலு, மற்றும் ஜெம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிர்வாக இயக்குனருமான டாக்டர் பி பிரவீன் ராஜ் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது..
நவீன மருத்துவத்தில் புவியியல் எல்லைகள் என்பது மருத்துத்திற்க்கு, இனி ஒரு தடையல்ல என்பதை இந்த திட்டம் நிரூபிக்கிறது எனவும், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை துறையில், இது ஒரு புதிய மைல்கல்லை எட்டி உள்ளதாகவும், நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் துல்லியமான சிகிச்சையை மேம்படுத்துவதோடு, மட்டுமின்றி வருங்கால அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இது ஒரு சிறந்த கற்றல் வாய்ப்புகளையும் வழங்கும் என்றனர். எங்களது சென்னை, மற்றும் கோவை மையங்களை இணைப்பதன் மூலமாக, சிக்கலான அறுவை சிகிச்சை முறைகளை, கையாளுவதில் மிக உயர்ந்த தரத்தையும், துல்லியத்தையும் எங்களால் உறுதி செய்ய முடிகிறது என்று தெரிவித்தனர். ரோபோட்டிக் அறுவை சிகிச்சை செயல் முறையில், கோவை ஜெம் மருத்துவமனையில் இருந்து, கணைய புற்று நோய்க்கான சிக்கல்களை டாக்டர் பழனிவேலு, புற்றுநோய் பாதிப்பை அகற்றியும், சென்னையில் இருந்து, டாக்டர் செந்தில்நாதன் உடற்கூறு மறு சீரமைப்பு பகுதியையும், வெற்றிகரமாக செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த திட்டம் மருத்துவத்துறைக்கு ஒரு புதிய அடையாளமாக திகழும் என நம்புவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.