
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனை சார்பாக ஆண்டு தோறும், இதய குறைபாடுகள் மற்றம் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தபட்டு வருகின்றது. இதன் மூன்றாவது பதிப்பாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. செப்டம்பர் 28ம் தேதி உலக இதய தினத்தை முன்னிட்டு இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் இப்போட்டிகள் நடைபெற்றது. 10 கிலோமீட்டர் தூர ஓட்டம், 5 கிலோ மீட்டர் தூர ஓட்டம், 1முதல் கிலோமீட்டர் தூர ஓட்டம் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டிகளை, கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் கோகுலகிருஷ்ணன், கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அனைவரது மத்தியில் பேசிய குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி ரகுபதி வேலுச்சாமி கூறியதாவது…
ரன் பார் லிட்டில் ஹார்ட்ஸ் எனும் தலைப்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாரத்தான் போட்டிகளின் மூலமாக பெறப்பட்ட நிதியை கொண்டு சுமார் 55 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சைகள் அளிக்க பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு நடைபெற்று வருகின்றது என்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நன்கு குணமடைந்த குழந்தைகளும் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு, அனைவரது மத்தியிலும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் இதயக் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து, உரிய நேரத்தில் சரியான சிகிச்சைகள் அளிப்பதன் மூலமாக அவர்களை முற்றிலும் குணப்படுத்த முடியும் எனவும், இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
