கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் 1000 த்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவுஎம்.ஜி.ஆர். 38 வது நினைவு நாள்கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்குமார் வழங்கினார்

தமிழக முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 38 வது நினைவு நாளையொட்டி கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்தும் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார் மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

தமிழக முன்னாள் முதல்வரும் அ இ அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 38 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி அதிமுகவினர் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக ஜோதிபுரம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு சாதம், சாம்பார், ரசம், மோர், பொறியல், அவியல், அப்பளம், ஊறுகாய், வடை, பாயசம் உள்ளிட்ட மதிய உணவு வழங்கினர்.

முன்னதாக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள எம் ஜி ஆர் திரு உருவ சிலைக்கு அவரது நினைவு நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார்.

இந்நிகழ்ச்சிகளில் மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் ஜெயராமன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.