கோவை புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில்எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டுவிளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபரகரணங்கள்

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபரகரணங்கள் வழங்கும் விழா நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்றது. இந்நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணியினருக்கு விளையாட்டு உபகரணங்களை கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் மற்றும் மாணவர் அணி மாநிலச் செயலாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

தமிழக முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாளை அஇஅதிமுகவினர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை புறநகர் வடக்கு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபரகரணங்கள் வழங்கும் விழா நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்னேஷ் சுப்பையன், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கே வி என் ஜெயராமன், மேற்கு ஒன்றியச் செயலாளர் கோவனூர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் மற்றும் மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களிடம் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், எவ்வாறு சிறந்த தலைவர்களை தேர்தெடுப்பது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணியினருக்கு விளையாட்டு உபகரணங்களை கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் மற்றும் மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

இந்த விளையாட்டு உபகரண பையில் ஒரு கிரிக்கெட் மட்டை, 2 பந்துகள், 2 பேடுகள், கீப்பிங் கிளவுஸ், பேட்டிங் கிளவுஸ், 3 ஸ்டம்ப்புகள் மற்றும் அனைவருக்கும் தொப்பி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

இந்நிகச்சியில் முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் போ சண்முகம், பேரூராட்சி செயலாளர்கள் ஆனந்தன், ரகுநாதன், பகுதி செயலாளர்கள் சின்னசாமி, வனிதாமணி, பன்னிமடை செல்வராஜ், முன்னாள் குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் டி ரவி, முன்னாள் சோமையம்பாளையம் ஊராட்சி தலைவர் ரங்கராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் மாணிக்கம், சம்பத், அய்யாசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட கழகச் செயலாளர் மணிகண்டன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர் சசிகுமார், மாணவரணி மாவட்ட இணை செயலாளர் மனோஜ் உள்பட ஒன்றிய கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.