
கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சிவாஜி காலனி பகுதியில் இயங்கும், அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை, மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மாபெரும் கண் பரிசோதனை முகாம் வரும் எட்டாம் தேதி கோவை புலியகுளம் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கண் பரிசோதனை சிறப்பு முகாமில், பொதுமக்களுக்கு இலவசமாக கண்புரை நோய், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், மாறுக்கண், சீல் நீர் வடிதல், துரப்பார்வை, ஆகியவற்றிற்கான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும் எனவே இந்த கண் பரிசோதனை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் நிறுவன தலைவரும், சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் தெரிவித்துள்ளார்.
