கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அரசு போக்குவரத்து பணிமனையில் 20 ஆண்டுகளாக நடத்துனராக பணியாற்றி, ஓய்வு பெற்ற நடத்துனர் ஜான் பீட்டருக்கு வழியனுப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்டம் இடையர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜான் பீட்டர், இவர் ஒண்டிப்புதூர் அரசு போக்குவரத்து கழகத்தில், 20.08.2006ம் ஆண்டு முதல் 31.01.2026 வரை நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது பணி நிறைவு விழா நிகழ்ச்சி ஒண்டிப்புதூர் அரசு பேருந்து பணிமனையில் நடைபெற்றது. 60 வயதை நிறைவு பெற்றதன் காரணமாக பணி ஓய்வு பெற்ற நடத்துனர் ஜான் பீட்டருக்கு, சக பணியாளர்களான நடத்துனர்கள் ஓட்டுநர்கள் என பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஒண்டிப்புதூர் கிளை மேலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பின் பேரவை பொதுசெயலாளர் விடுதலை ரவி வரவேற்புரையாற்றினார். மேலும் சிறப்பு விருந்தினராக அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் நிறுவன தலைவரும், சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் கலந்து கொண்டு, பணி ஓய்வு பெற்ற ஜான் பீட்டருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து அனைவரது மத்தியிலும் பேசிய ஜான் பீட்டர், தனக்கு ஆரம்ப கால கட்டத்தில் எனக்கு ஓடாத வண்டியில் டியூட்டி போட்டார்கள். தினசரி இரவு 1.20க்கு மதுரைக்கு செல்லும் பேருந்தில் தனக்கு டியூட்டி போட்டார்கள். இந்த வாகனத்திற்கு இரவில் நான் டியூட்டிக்கு வந்தால் வண்டிக்கு டிரைவர்கள் வரமாட்டார்கள், டிரைவர் வந்தால் பேருந்து சரியாக ஓடாது என்ற நிலையில் தொடர்ந்து பணியாற்றினேன் பின்னர் எனக்காகவே சிவக்குமார் எனும் ஓட்டுநர் வந்து இந்த பேருந்தை தொடந்து இயக்கி வந்தோம் என்றார். இவ்வாறு பல்வேறு இடையூறுகளை சந்தித்து தான் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன் அதற்க்காக எனக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவி, மற்றும் நண்பர்கள், என அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பின் திருப்பூர் மண்டல பொதுச்செயலாளர் மாரியப்பன், மாநில துணை செயலாளர் மணி, மண்டல பொருளாளர் துரைசாமி, ஓய்வு பெற்ற தனி செயலாளர் சார்லஸ், கணேசன், ராஜேஷ் பிரேம் குமார், கோவை மண்டல தலைவர் சக்திவேல், மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒட்டுநர்கள், நடத்துனர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.