
அடுத்த செப்டம்பர் 15 அன்று தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் தான் இருப்பார் – திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோ.வி.லெனின் பேச்சு
வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

கோவை வடக்கு மாவட்டம் சார்பில், “ஓரணியில் தமிழ்நாடு” “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் துடியலூரில் நடைபெற்றது.
கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோ.வி.லெனின் பேசுகையில்;-
இன்றைக்கு இருக்கின்ற மோடி, அமிஷாவும் சரி, ஒட்டுமொத்த தமிழர்களின் துரோகி என்றால் இவர்கள் தான், நமது முதல்வர் அவர்கள் மண், மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு நடத்தினார். இந்த ஆண்டு போல வரும் ஆண்டிலும் செப்டம்பர் 15 அன்று மீண்டும் தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவியில் இருப்பார் என்று தெரிவித்தார்
தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு மூலம் அதிக உறுப்பினர்களை சேர்த்த நிர்வாகிகள் கெளரவிக்கப்பட்டனர்.

இந்த கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் கரூர் முரளி, மேயர் ரங்கநகி, முன்னாள் எம்பி நாகராஜ், மாவட்ட துணைச்செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, மாவட்ட பொருளாளர் ரகுமான், முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டிஆர்.சண்முகசுந்தரம், டிபி.சுப்பிரமணியம், அறிவரசு, வழக்கறிஞர் முனுசாமி, மாலதி நாகராஜ், துடியலூர் பகுதி பொறுப்பாளர்கள் அருள்குமார், இராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
