சூளகிரியில் ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா பராமரிப்பு இன்றி காணப்படும் அவல நிலை,பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக பூங்கா மீண்டும் செயல்பட கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள மற்றும் சிறுவர்கள் விளையாட பூங்காக்கள் என எந்த வசதியும் இன்றி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில்

கிராமங்கள்தோறும் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் ஆகியோர் பொழுதுபோக்கும் வகையில், அம்மா பூங்காவுடன் இணைந்த உடற்பயிற்சிக் கூடம் அமைக்கும் திட்டம் கடந்த 2016-17-இல் அரசால் ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் சூளகிரி தியாகராசனப்பள்ளி கிராமத்திற்க்கு செல்லும் சாலையில் அம்மா பூங்காவுடன் கூடிய உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டது.

தற்போது பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பராமரிப்பு இன்றி காணப்பட்டு வருகிறது, மேலும் நவீன உடற்பயிற்சி கூடத்தின் இயந்திரங்கள் உடைந்தும் , பராமரிப்பு இன்றியும் காணப்படுகின்றது.

மேலும் பொதுமக்கள்,வயதானவர்கள், சிறுவர்கள் என நடைபயிற்ச்சி , மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள இந்த பூங்கா சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்