
தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் தமிழ்நாடு யாதவ மகாசபை தஞ்சை மாவட்டம் சார்பில் முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்து கோன் 268-வது புஷ்பாஞ்சலி விழா மாவட்ட தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மண்டல தலைவர் டி.கே.ஜி.கண்ணன், மாநில அமைப்பு செயலாளர் அடைக்கலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மாவீரன் அழகுமுத்து கோன் உருவப்படத்திற்கு அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.பின்னர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் கலந்து கொண்டு அழகு முத்து கோன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, மாநகர தலைவர் நாராயணன், செயலாளர் ஜெய்சங்கர், இளைஞர் அணி கீர்த்தின் அழகிரி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் மா.சேகர், மாநகர செயலாளர் வழக்கறிஞர் சரவணன், அமைப்பு செயலாளர் காந்தி, மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், வேளாண்மை துறை நவநீத கிருஷ்ணன். பாஜக சார்பில் மாவட்ட துணைத்தலைவர் மேலவெளி முரளிதரன், தங்கதுரை, பாரதிமோகன், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சொக்கா ரவி மற்றும் பலர் கலந்து கொண்டு அழகு முத்து கோன் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். முடிவில் மாவட்ட பொருளாளர் எல்.முருகன் நன்றி கூறினார்.
