திருப்பத்தூர் அருகே திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக அ.நல்லதம்பி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நேற்று வேட்பாளர் நல்லதம்பி மனுதாக்கல் செய்தார்.

பின்னர் இன்று திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனேரி,ராச்சமங்கலம்,
பசலிக்குட்டை,செளடேகுப்பம்,பொம்மிகுப்பம்,ஜம்மணபுதூர்,உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் நல்லதம்பி கூட்டணி கட்சியினருடன் பிரச்சாரத்திற்கு சென்றார்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் வேட்பாளர் நல்லதம்பிக்கு ஆலாத்தி எடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேட்பாளர் நல்லதம்பி பேசுகையில்,

கடந்த ஐந்தாண்டில் தளபதி ஆட்சியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை,தமிழ் புதல்வன் திட்டம், உள்ளி திட்டங்களை எடுத்துரைத்து பொது மக்களிடப் தீவிர சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், கூட்டணி கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.