
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 5ம் ஆண்டு புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்திருந்த நிலையில்,
இந்தபுத்தக திருவிழா 29ம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். அவரை வரவேற்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் ரிப்பன் வெட்டி புத்தக திருவிழா அரங்கத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் நூற்றுகணக்கான புத்தக ஸ்டால்கள் அமைக்கப்பட்ட நிலையில் அதனை பார்வையிட்டு சில புத்தக நிலையங்கள் அளித்த புத்தகத்தை பெற்றுக்கொண்டார்.பின்னர் அரங்கிற்கு வெளியே அமைக்கப்பட்ட விற்பனை ஸ்டால்களை பார்வையிட்டு பிரண்டை, தூதுவளை உள்ளிட்ட ஊறுகாய் பாட்டில்களை அமைச்சர் வாங்கி விற்பனையை தொடங்கி வைத்தார்.
பின்னர் விழா மேடையில் பேசிய அமைச்சர்
பாமர மக்களுக்கும் எளிய வகையில் புரியும் நூலை எழுதியவர் தமிழகத்தை ஐந்து முறை ஆண்ட அண்ணன் கலைஞர்தான் ஆசிரியர் பெருமக்கள் இருக்கிறீர்கள் படித்து பாருங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டதெல்லாம் இருக்கும் என பெருமிதம் தெரிவித்தார்.
கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் புகைப்படத்தில் எல்லாம் பேனரில் போடுகிறார்கள்
அஞ்சலையம்மாள் அவர்களின் பற்றி புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர்களின் பெயரில் நூலகம் அமைத்தது திராவிட மாடல் ஆட்சி தான் புத்தகத் திருவிழாவில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
உடன் இந்த நிகழ்ச்சியின் போது சட்டமன்ற உறுப்பினர்கள்,
தேவராஜ், நல்லதம்பி,வில்வநாதன். மாவட்ட ஒன்றிய குழு தலைவர் திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன்.திருப்பத்தூர் சேர்மன் சங்கீதா வெங்கடேசன். ஜோலார்பேட்டை சேர்மன் காவியா விக்டர். ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ். துணை சேர்மன் யூ ஆர் சபியுல்லா. ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
