
திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலமாக திகழும் ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோவில் வருகின்ற டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி அன்று காலையில் பரணி தீபம் மற்றும் மாலை மகா தீபம் திருவிழா நடைபெற உள்ளதால் கர்நாடகா மற்றும் ஆந்திரா தமிழ்நாடு என பல்வேறு மாநிலத்தில் இருந்து மற்றும் பல்வேறு மாவட்டத்தில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது மற்றும் கிரிவலம் செல்வார்கள் இதனால் தனியார் திருமண மண்டபத்தில் நகர போக்குவரத்து காவல்துறையின் சார்பில் மற்றும் கூடுதல் நகர காவல் கண்காணிப்பாளர்
தனுஷ் குமார் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருணாநிதி முன்னிலையில். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஏ ஏ ஆறுமுகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் அப்போது
மாட வீதி மற்றும் கிரிவலப் பாதையில் ஆட்டோக்கள் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நோ பார்க்கிங் என்ற இடத்தில் ஆட்டோக்கள் நிற்பது தவிர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் ஒரு வழிச்சாலையில் செல்வதை தவிர்த்துக் கொள்ளவும் வேண்டும். ஆட்டோக்கள் செல்வதற்கு வழிவகை எது உள்ளதோ அதன் பாதையில் மட்டுமே செல்ல வேண்டும்.ஆட்டோவில் பயணம் செய்யும் நபர்களுக்கு ரூபாய் 50 மட்டுமே வசூல் செய்ய வேண்டும் அதை தவிர்த்து அதிக கட்டணம் வசூல் செய்தால் அந்த ஆட்டோ மீது ஊறிய நடவடிக்கை எடுக்கப்படும். மற்றும் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது. வட்டாரம் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட 3530 ஆட்டோக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் அனுமதி வழங்காத ஆட்டோக்கள் செயல்பட்டால் அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.
