608 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலத்திற்கு பூமி பூஜை போட்ட அமைச்சர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சின்ன புத்தூர் ஊராட்சி சத்திரத்தில் இருந்து சின்ன புத்தூர் செல்லும் வழியில் வேலூர் பகுதியில் அமைந்துள்ள சின்னக்கரை ஓடையின் குறுக்கே ரூபாய் 608 இலட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திமு கழகத் துணைப் பொதுச் செயலாளர் மு பெ சாமிநாதன் மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர் உடன் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் இல பத்மநாபன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் , தாராபுரம் மேற்கு ஒன்றிய திமு கழக செயலாளர் எஸ் வி செந்தில் குமார், திமு கழக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், கோணப்பன் சாலை செந்தில்,சின்ன புத்தூர் ராஜாமணி, நந்தகுமார், தாராபுரம் மேற்கு ஒன்றிய திமு கழக மாணவர் அணி துணை அமைப்பாளர் அருண் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தெய்வசிகாமணி, இளைஞரணியினர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்…