நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை ஆய்வு செய்து பெயர் நீக்குதல் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் தலைமையில் இன்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் காஞ்சனா ,தேர்தல் துணை வட்டாட்சியர் ராமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி வகுப்பில் இந்திய தேர்தல் ஆணையம் முத்திரையின்படி ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 270 வாக்குச்சாவடிகள் மற்றும் வீடு வீடாக சென்று வாக்காளர்களை ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் புகைப்படம் மாற்றம், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.