பட்டினி தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய்யின் ஆணைக்கிணங்ககோவை ஆனைகட்டியில் பழங்குடிகள் வாழும் மலைவாழ் கிராமத்தில்அசைவ விருந்து அன்ன தானம் செய்த இளம் பெண் தொழிலதிபர்

கோவை ஆனைகட்டியில் பட்டினி தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க பழங்குடிகள் வாழும் மலைவாழ் கிராம பகுதிகளில் அசைவ விருந்து அன்ன தானம் செய்து பசி பிணியை போக்கிய தமிழக வெற்றிக் கழகத்தை சார்ந்த இளம் பெண் தொழிலதிபர் உமா மகேஸ்வரி.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குமாறு, தமிழக வெற்றிக் கழக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான சி. ஜோசஃப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், கஸ்தூரிநாயக்கன் பாளையம் பகுதியை சார்ந்த இளம் தொழில் அதிபரும், தமிழக வெற்றிக் கழக தொண்டருமான உமா மகேஷ்வரி, கோவை ஆனைக்கட்டி மலை பகுதியில் வாழும் மலை வாழ் பழங்குடிகளுக்கு அசைவ விருந்து வழங்கினார். பழங்குடிகள் மட்டுமின்றி அப்பகுதி வழிபோக்கர்கள், வாகன ஓட்டிகள் உட்பட 1,500க்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி அன்ன தானம் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த உமா மகேஷ்வரி பேசும்போது, தமிழ்நாட்டின் முதல்வரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, அன்னதானம் வழங்குவதாக தெரிவித்தார். பசி எனும் கொடுமையை நாட்டில் முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்ற முதல்வர் விஜய் அவர்களின் உன்னதமான நோக்கத்திற்கு உறுதுணையாக இந்த அன்ன தானம் சேவையை செய்வதாக தெரிவித்தார்.

முதியோர், பெண்கள், சிறுவர்கள் என பலருக்கும் அசைவ விருந்து அன்னதானம் வழங்கியபோது மன நிறைவு தந்ததாக தெரிவித்த உமா மகேஸ்வரி, பழங்குடிகள் வாழும் பகுதியில் அன்னதானம் வழங்கியது முதல்வர் விஜய் அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சி என தெரிவித்தார். இதுபோன்று சேவைகளை முன்பிருந்து செய்து வருவதாக தெரிவித்த அவர், இன்றைய தினம் மட்டுமின்றி இனி வரக்கூடிய நாட்களிலும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் என்றும், பசி இல்லாத மனித குலத்தை உருவாக்கும் தளபதி விஜய் அண்ணா அவர்களின் உன்னத நோக்கத்திற்கு என்றும் உறுதுணையாக செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.