பழநி தட்டான்குளம் பகுதில் உலக ரேபீஸ் தினத்தை முன்னிட்டு கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தட்டான் குளம் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில்
96 செல்லபிராணிகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது. பழனி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர்.கேசவன் தலைமையில் மருத்துவர் மதுமிதா,மருத்துவர் செந்தில்குமார் , கால்நடை ஆய்வாளர் பாஸ்கரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் செந்தில்குமார், சங்கீதா பங்கற்றனர்