
1992 இந்தியாவின் பெருமைக்குரிய வரலாற்றுச் சின்னமாகவும், 450 ஆண்டுகள் இஸ்லாமியர்கள் தொழுகை நடந்து வந்த அயோத்தி பாபரி மஸ்ஜித்தை, டிசம்பர் 6ம் தேதி இடித்துத் தள்ளியதை கண்டித்தும்,
பாபரி மஸ்ஜிதைத் தொடர்ந்து காசி, மதுரா உள்ளிட்ட பல இடங்களிலும் உள்ள பாரம்பரியமிக்க பள்ளிவாசல்களை இடித்திடத் திட்டம் தீட்டியதை கண்டித்தும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கோவை உக்கடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ குப்பையில் வீசிவிட்டு, பாபரி மஸ்ஜித் பாணியில் பல்லாயிரம். பள்ளிவாசல்கள், மதரசாக்கள், அவற்றிற்குட்பட்ட சொத்துகள் ஆகியவற்றை முஸ்லிம்களிடமிருந்து பறிக்க, ஒன்றிய பாஜக அரசு வக்ஃப் திருத்தச் சட்டம் 2025ஐ கொண்டு வந்துள்ளது .
இந்தக் கொடுஞ்சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பே உ.பி, டெல்லி உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் பல நூறு வீடுகள், பள்ளிவாசல்கள் என பாஜக அரசின் புல்டோசர்களால் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் வீடுகள், சமூக ஆர்வலர்கள் என பலரின் சொத்துக்கள் புல்டோசர்களால் ஈவிரக்கமின்றி இடித்துத் தள்ளப்பட்டன. இடிப்புகளெல்லாம் பெருமளவில் அரங்கேறிய பிறகு உச்சநீதிமன்றம் இதை வன்மையாக கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேர்தல் ஆணையத்தையே தன் வசப்படுத்திக் கொண்டு வாக்குத் திருட்டுகளைத் துணிவோடு அரங்கேற்றி வரும் இந்த பாசிஸ்டுகள் நீதித்துறைக்குள் செய்துள்ள ஊடுருவல்கள் இந்த நாட்டின் நீதி பரிபாலனத்தையே அச்சத்திற்கும் அவலத்திற்கும் உள்ளாக்கி வருகின்றது.
நாட்டு மக்களின் வாழ்வுரிமை, வாக்குரிமை, வழிபாட்டு உரிமை ஆகியவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பாஜக ஆட்சியில் எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.
எனவே வக்பு திருத்த சட்டம் 2025 என்ற வழிப்பறிக் கொள்ளைத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், வழிபாட்டுத்தலங்கள் சிறப்பு விதிகள் சட்டம் 1991ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்,
ஜனநாயகப் படுகொலைக்கு வழிவகுக்கும் அவசரமான சிறப்பு வாக்காளர் பட்டியல் சீராய்வுப் பணியைக் கைவிட வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தோளில் கருப்பு துண்டு அணிந்தும், கையில் கருப்பு கொடி ஏந்தியும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டத்தைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக நடத்தியது. இதில் தமுமுக மாவட்டத் தலைவர் சர்புதீன், மாவட்ட செயலாளர் முஜிப் ரஹ்மான்,
மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு பழனி ஃபாருக்,
விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் சுசி கலையரசன்.
திராவிடர் தமிழர் கட்சி மாநில தலைவர் வெண்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
தொடர்ந்து தமுமுக மாநில செயலாளர் சாதிக் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் பஷீர், 86வது வார்டு மாமன்ற உறுப்பினர் அகமது கபீர்.மமக மாவட்டச் செயலாளர் இப்ராகிம், தமுமுக மாவட்ட பொருளாளர் சிராஜுதீன், வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் அக்கீம் . வடக்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ். தமுமுக மாவட்ட துணைத்தலைவர்
டி எம் எஸ் அப்பாஸ். தமுமுக மாவட்ட துணைச் செயலாளர்கள்
நூர்தீன், பைசல் ரகுமான், அசாருதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
