
இஸ்ரேல், அமெரிக்க கூட்டு சேர்ந்து பாலஸ்தீனம்-அரபு நாடுகள் மீது நடத்தி வரும் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பாகிஸ்தானில் அக்டோபர் 15,16 தேதிகளில் நடைபெறும் சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா தீர்மானம் முன்மொழிய வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய பாலஸ்தீன நட்புறவுக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இரா.அருணாச்சலம் தலைமை வகித்தார். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், தமிழ்தேச மக்கள் முன்னணி மாநகர செயலாளர் எம்.ஆலம்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் இரண்டாம் உலகப்போருக்கு பின்னதாக யூதர்கள் நாடு இல்லாமல், இடம் இல்லாமல் அலைந்து திரிந்த போது பாலஸ்தீனம் ஆதரவு தந்ததன் அடிப்படையில் இஸ்ரேல் நாடு உருவானது. பின்னர் வல்லரசாக உருமாறி ஆதரவு தந்த பாலஸ்தீனத்தை அபகரிக்க தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற யாசர் அராபத் பாலஸ்தீன விடுதலைக்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்து போராடினார் . தொடர்ந்து பாலஸ்தீனத்தின் இறையாண்மைக்காக மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீனம் காசா நகரத்தின் மீது கொடூரமான போரை சர்வதேச போர் விதிமுறைகளையும் மீறி,தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், குண்டுகளையும் வீசி பாலஸ்தீனியர்களை கொன்று குவித்து வருகிறது. ஈரான் மீது சைபர் கிராம் தாக்குதலையும் கொடுத்துள்ளது. இதுவரை சுமார் 50,000 க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அப்பாவி பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தெரிவித்த லெபனான்,சிரியா, ஏமன், ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீது இஸ்ரேல் வல்லரசு அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து கொடூரமான போரை தொடுத்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகளும், இந்தியாவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் உள்ளன. தங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக ஆக்கப்பட்டு வரும் பாலஸ்தீனர்களை பாதுகாக்க இஸ்ரேல் ஆதரவுகளை திரும்ப பெற வேண்டும், பாலஸ்தீன,அரபு நாடுகள் மீதான போரை நிறுத்த வேண்டும், பாலஸ்தீன இறையாண்மையை பாதுகாக்க வேண்டும், இந்தியா ஆயுதங்களையும், தொழிலாளர்களையும் இஸ்ரேலுக்கு அனுப்பக்கூடாது, தூதரக உறவை முறித்துக் கொள்ள வேண்டும் வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இந்தியா,ஐநா மன்றம், சர்வதேச நாடுகளுக்கு ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் சார்பாக பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்ளப்பட்டது. ஆர்பாபாட்டத்தினை மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன் துவக்கி வைத்தார்.இந்திய, பாலஸ்தீன நட்புறவுக் கழகத்தின் மாநில தலைவர் கசி.விடுதலைக்குமரன் முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தாளாண்மை உழவர் இயக்கத்தின் நிறுவனர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு, சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.குருசாமி,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெய்னுல் ஆப்தீன், எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ், மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளர் எம்.அகமதுகபீர், மனித நேய மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் கே.இப்ராம்ஷா, தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க தலைவர் முஹம்மது இப்ராஹிம், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் ஜபருல்லா,சிபி எம்எல் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வீரக் குமார், மகஇக மாநகர செயலாளர் எழுத்தாளர் சாம்பான், தஞ்கை மாவட்ட செயலாளர் செந்தில் குமார், மக்கள் விடுதலை பண்பாட்டு பேரியக்க தலைமை கவிஞர் பாட்டாளி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் அ.ரெ.முகிலன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகி அருண் சுபாஷ்,ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி மாயன், அரசு போக்குவரத்து சங்க நிர்வாகி ஜீவா, ஆட்டோ சங்க நிர்வாகி லெட்சுமணன், எஸ் சிபிஐ சங்க நிர்வாகி காதர, ஜனநாயக விவசாயிகள் சங்க தலைவர் ஜோதிவேல், மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் சரவணன், திருநாவுக்கரசு,தேவா, சாமிநாதன், தாமஸ், அபுசாலி, அருண்குமார், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
