பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை கேட்டு அறிய உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது அதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது அதனை தொடர்ந்து இன்று பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மக்களின் குறைகளை மனுக்களாக பெற அளேபுரம் சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இம் முகாமில் மகளிர் உரிமைப் தொகை ,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ,வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சமூக மலன் மற்றும் மகளிர் உரிமை துறை, வேளாண்மை உழவர் நலத்துறை சிறப்பு திட்டங்கள் என 15 துறைகள் 46 சேவைகள் அடங்கிய திட்ட முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி நேரில் பார்வையிட்டார். இந்த முகாமில் தர்மபுரி மாவட்ட உதவி ஆணையர் (ஆயம்) S.நர்மதா, பென்னாகரம் வட்டார ஊராட்சி அலுவலர் சக்திவேல் , பென்னாகரம் வட்டார கிராம ஊராட்சி அலுவலர் லோகநாதன், பெண்ணாகரம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன் திமுக ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன் ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.