
போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து பெரும்பாலை அருகே உள்ள காவக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (எ)பழனியப்பன் 98 இவரது மனைவி தைலம்மால் 78 தம்பதியினர்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகள் உள்ளனர். மூத்த மகன் ஆதரவில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இளைய மகன் நல்லப்பன் 52, திருமணம் ஆகவில்லை இவரது தந்தையிடம் சொத்து கேட்டு தொடர்ந்து பிரச்சினை செய்து வந்துள்ளார்.

இளைய மகன் தங்களை பார்த்துக் கொள்வது இல்லை என்பதால் இளைய மகனுக்கு சொத்தை பிரித்து தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகன் நல்லப்பன் தனது தாய் தந்தையரை விறகு கட்டையால் தாக்கி கை காலை உடைத்துள்ளார். இதில் பழனியப்பன் கால் முறிந்துள்ளது. தைலமாலுக்கு கை முறிந்துள்ளது. இவர்கள் தற்போது பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
தனது இளைய மகன் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
சொத்துக்காக பெற்ற தாய் தந்தையரையே, விறகு கட்டையால் தாக்கியுள்ள சம்பவம் பென்னாகரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
