பென்னாகரம் புறவழி சாலையை இருவழிச் சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவாக்க செய்து தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனை தருமபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜ் நேரில் ஆய்வு செய்தார்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புறவழிச்சாலையான இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 16 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 2.50 கிலோமீட்டர் தொலைவிலான நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை நெடுஞ்சாலைத்துறை தர்மபுரி கோட்ட பொறியாளர் நாகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சாலையில் சரியான அளவு தார் கலவை ஊற்றப்பட்டுள்ளது மற்றும் சாலையின் அகலம் மற்றும் சாலை சரியாக அமைக்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போதுஇந்த பென்னாகரம் உதவி கோட்ட பொறியாளர் புருஷோத்தமன், தர்மபுரி தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் பிரேமா ராணி மற்றும் பென்னாகரம் உதவி பொறியாளர் சிங்காரவேலு, தர்மபுரி தரக்கட்டுப்பாடு உதவி பொறியாளர் மன்னர்மன்னன், மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.