மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் விழிப்புணர்வுநிகழ்ச்சி நடைபெற்றது

தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக ஜனவரி மாதம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில்
மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாலமுருகன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரராஜன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் ,சார்பு ஆய்வாளர் செல்வக்குமார், போக்குவரத்து கழக உதவி பொறியாளர் இயக்கம் அசோக்குமார், கிளை மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும், சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும், அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, குடி போதையில் வாகனத்தை இயக்கக் கூடாது , போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பேருந்து ஓட்டுனர்கள்,
இருசக்கர வாகன ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மற்றும் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்