ரயில்வே பாதுகாப்பு பணியில் 41வது எழுச்சி நாளை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் வழங்கிய ரயில்வே பாதுகாப்பு படையினர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படையின் 41வது எழுச்சி நாளை முன்னிட்டு ஜோலார்பேட்டையில் உள்ள நேசம் முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் மற்றும் பிஸ்கட் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை முதியோர்களுக்கு வழங்கினர்

மேலும் இந்நிகழ்வில் ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் நிகில் குமார் குப்தா மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர் என்பதை குறிப்பிடத்தக்கது