ராமநாதபுரம் நகராட்சியை கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்!!!

ராமநாதபுரம் அரண்மனை முன்பு நகர் பா.ஜ.க சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ராமநாதபுரம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நகர் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்தார்.மாவட்ட பொதுச்செயலாளர் கவுன்சிலர் ஜி.குமார் அனைவரையும் வரவேற்றார்.ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய கடைகள் ஏலம் தொடர்பாக முறைகேடு நடந்துள்ளதையும்,ஆங்காங்கே தெருக்களில் கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதை கண்டித்தும்,கஞ்சா,கள்ளத்தனமாக மது உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விற்பனை அதிகரிப்பை கண்டித்தும் முன்னாள் கயறு வாரிய தலைவர் குப்பு ராமு,மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரன்,மாவட்ட ஊடக பிரிவு தலைவர் எஸ்.பி.குமரன் உள்ளிட்டோர் பேசினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.