வாங்க கற்றுக் கொள்ளலாம் தீ பாதுகாப்பு அடிப்படை பயிற்சி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த சின்ன பள்ளத்தூர் மற்றும் ஒகேனக்கல் தீயணைப்பு நிலையத்தின் மூலமாக தமிழ்நாடு தீயணைப்பு-மீட்புப்பணித்துறை இயக்குநர் அவர்களது உத்தரவின்படியும், சேலம் மண்டலம், துணை இயக்குநர் அவர்களது வழிகாட்டுதலின்படியும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பாதுகாவலர்களுக்கு (Security Guard’s) “வாங்க கற்றுக்கொள்ளலாம்” என்ற நிகழ்ச்சியின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு-மீட்புப்பணி நிலையங்களிலும் 09-02-2026 முதல் ஒரு வார காலத்திற்கு “தீ பாதுகாப்பு குறித்த செயல்முறை விளக்க பயிற்சிகள்” அளிக்கப்பட உள்ளது. தருமபுரி மாவட்ட தலைமை தீயணைப்பு-மீட்புப்பணி நிலையத்தில் மாவட்ட அலுவலர் செல்வி ப.அம்பிகா அவர்கள் தலைமையில் செயல்முறை விளக்க பயிற்சி தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் LPG தீ விபத்து, வாகன தீ விபத்து, மின்சார தீ விபத்து, முதலுதவி சிகிச்சைகள் மற்றும் தீயணைப்பான்களை (Fire Extinguisher) கையாள்வது குறித்து அடிப்படை பயிற்சிகள் 130-தனியார் பாதுகாவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெறும் பாதுகாவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. எனவே 09-02-2026 முதல் ஒரு வார காலத்திற்கு நடைபெறும் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு அடிப்படை பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கொள்ளலாம் என பெண்ணாகரம் தீயணைப்பு நிலையத்தின் மூலமாக தனியார் பங்களிப்பு பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்தனர்.