விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அத்திகுளம் சிஎஸ்ஐ கிறிஸ்துவ நாடார் உறவின் முறை சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ நாடார் உறவின்முறை சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையாளரிடம் அளிக்கப் பட்டுள்ள கோரிக்கை மனு குறித்து செயலாளர் பிரதிவிராஜன் கூறியுள்ள தாவது: கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அத்திகுளம் சிஎஸ்ஐ கிறிஸ்தவ நாடார் உறவின்முறை சங்கத்தில் செயலானராக செயல்பட்டு வருகிறேன். இச்சங்கத்தில் உள்ள சங்க உறுப்பினர்கள் மற்றும் மக்கள் அளித்த நன்கொடையின் அடிப்படையில் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட சில சொத்துக்கள் மதுரை சிஎஸ்ஐ க்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பதவிக்கு வந்த உள்ள பேராயர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகர் மற்றும் சிலர் கூட்டாக சேர்ந்து சங்க சொத்துகளை அபகரிக்கும் நோக்குடன் சிஎஸ்ஐடிஏ

விற்கு எழுதிக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தி வந்தனர். ஆனால் செயலாளராகிய நான் உட்பட சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் மறுத்து விட்டோம். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெய் சிங் பிரின்ஸ் பிரபாகர் சிஎஸ்ஐடிஎ விற்கு செயலாளர் என்று சொல்லிக் கொள்ளும் பெர்னாட்ஸ் ரத்தினராஜா, ஆகியோர் எங்கள் ஆலயத்தில் உள்ள ஆபிரகாம் சத்தியசீலன் என்ற நபருடன் கூட்டு சதி செய்து அத்திகுளம் சிஎஸ்ஐ கிறிஸ்துவ நாடார் உறவின் முறை என்ற சங்கம் அமைத்து 2025 ஆண்டு மே மாதம் 17ம் தேதி அன்று மேற்படி நபர்கள் மோசடியாக எங்கள் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பெரும் விலை மதிப்புடைய சுமார் 20 சென்ட் உள்ள திருமண மண்டபம் மற்றும் காலி இடத்தை சிஎஸ்ஐடிஏ என்ற அமைப்பிற்கு எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையம் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தும் மேலும் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் பி.டி.எம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து நிலுவையில் உள்ள நிலையில் மதுரை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் இது மேற்கொண்டு உரிய விசாரணை செய்து பத்திர பதிவில் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ள ஆபிரகாம் சத்தியசீலன், ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகர், பெர்னாட்ஸ் ரத்தினராஜா, மற்றும் பசுமலை சாம் ஜெபராஜ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.