வி ஜி இன்ஸ்ட்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்சஸ் மற்றும்வி ஜி ஸ்கூல் ஆப் நர்சிங் கல்லூரி சார்பில் அரீனா ஆப் சாம்ப்பியன்விளையாட்டு தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

கோவை துடியலூர் அருகே செயல்பட்டு வரும் வி ஜி குழும நிறுவனங்களின் ஓர் அங்கமான வி ஜி இன்ஸ்ட்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்சஸ் மற்றும் வி ஜி ஸ்கூல் ஆப் நர்சிங் கல்லூரி சார்பில் அரீனா ஆப் சாம்ப்பியன் என்ற பெயரில் ராதா வேணுகோபால் அவர்களின் நினைவாக விளையாட்டு தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் ஒட்டுமொத்த சாம்ப்பியன் பட்டம் வென்ற கிரீன் அணியினருக்கு பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர் துடியலூர் அருகே உள்ள வி ஜி குழும நிறுவனங்களின் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகிறது வி ஜி இன்ஸ்ட்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்சஸ் மற்றும் வி ஜி ஸ்கூல் ஆப் நர்சிங் கல்லூரி.

இக்கல்லூரி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 அன்று வி ஜி குழுமங்களின் முன்னாள் இயக்குநர் ராதா வேணுகோபால் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவாக கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து விளையாட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டு துடியலூரில் அரீனா ஆப் சாம்ப்பியன் என்ற பெயரில் விளையாட்டு தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் வி ஜி மருத்துவ குழுமங்களின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆஷா வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து கல்லூரி முதல்வர் நவினி ஸ்ரீ ஆண்டறிக்கையை வாசித்தார்.

வி ஜி மருத்துவ குழுமங்களின் தலைவர் டாக்டர் வி வெங்கடேஷ் தலைமை தாங்கி மாணவர்களிடையே விளையாட்டு தினம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் பலூன்களை ஆகாயத்தில் பறக்கவிட்டு விளையாட்டு தினம் தொடங்குவதாக அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் சி ஆர் பி எப் மத்திய பயிற்சி கல்லூரியின் நிர்வாக உதவி கட்டளை அதிகாரி ஆர் கிஷோர் குமார் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும்போது மருத்துவத்துறையில் செவிலியர்களின் பங்கு குறித்தும், தன் சொந்த அனுபவத்தில் செவிலியர்களால் அடைந்த பயன்கள் குறித்தும் எடுத்துக்கூறி வாழ்த்து தெரிவித்தார். மேலும் செவிலியர்கள் இதுபோன்ற விளையாட்டுக்களில் கவனம் செலுத்தி தங்கள் உடல்நலன்களில் அக்கரை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வுகளான கொடி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைத்தார். அதனை மாணவர்கள் ரிலே முறையில் மைதானம் முழுவதும் வலம் வந்து ஏற்றிவைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கினர்.

இதையட்டு மாணவர்கள் மற்றும் மாணவிகள் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர். மேலும் மாணவர்கள் பல்வேறு வடிவில் உருவாக்கிய மனித பிரமிடுகள் மற்றும் சிலம்பம் சுற்றுதல் அனைவரையும் கவர்ந்தது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வி ஜி மருத்துவ குழுமங்களின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆஷா வெங்கடேஷ், தலைவர் டாக்டர் வி வெங்கடேஷ், நிர்வாக அறங்காவலர்கள் டாக்டர் ரம்யா ஜெயராம், டாக்டர் நந்தினி வெங்கடேஷ், டாகடர் விஷ்ணுகுமார் ஆகியோர் மெடல்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

மேலும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ஒட்டுமொத்த சாம்ப்பியன் பட்டத்தை புளூ அணியினர் தட்டிச்சென்றனர். அவர்களுக்கு கோயம்புத்தூர் சி ஆர் பி எப் மத்திய பயிற்சி கல்லூரியின் நிர்வாக உதவி கட்டளை அதிகாரி ஆர் கிஷோர் குமார் வெற்றிக்கோப்பையை வழங்கினார்.

மாணவர்களில் விளையாட்டு உணர்வு, ஒழுக்கம் மற்றும் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விளையாட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வி ஜி மருத்துவமனை ஊழியர்கள், வி ஜி இன்ஸ்ட்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்சஸ் மற்றும் வி ஜி ஸ்கூல் ஆப் நர்சிங் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர். இறுதியில் பேக்கல்டி மேனேஜர் நவீன் நன்றி கூறினார்.