
கோவை மாவட்டம், சிட்கோ பகுதியை சேர்ந்தவர்
டேனியல் 60. இவரது வீட்டில் கார்பெண்டர் வேலை கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை, 38 வயதான மாதவன் என்பவர் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டு படுக்கையறையில் உள்ள கட்டில் வேலை செய்ய படுக்கையறைக்கு வந்த மாதவன், டேனியல் அசந்த நேரம், அங்கிருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவில் இருந்த 4 ஜோடி
வளையல், 8 ஜோடி கம்மல், கல்லு வச்ச மோதிரம் ஒன்று, 16 சவரன் செயின் ஒன்று, தாலிக்கொடி செயின் ஒன்று, தங்க காயின் மூன்று என மொத்தமாக 20 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளையும், இரண்டு ஜோடி, வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்றார்.
இது குறித்து சுந்தராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இன்று மாதவனை கைது செய்து விசாரணை நடத்தியதில், திருடியதை ஒப்பு கொண்டதுடன், நகைகளையும் எங்கு பதுக்கி வைத்து இருக்கின்றேன் என போலிசாரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாதவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். திருட்டு போன 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து திருட்டு போன பொருட்களை மீட்ட காவல்துறையினரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
