
இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்கப்படும் அதேபோல் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
நான்கு மாவட்டத்திலும் ரவுடிசத்தை முற்றிலுமாக ஒழிப்பேன் மேலும் நான்கு மாவட்டத்திலும் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாயும் அதே போல் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் காவலர்கள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

நான்கு மாவட்டத்திலும் ஒரே காவல் நிலையங்களில் பணியாற்றும் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என அனைவரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உடனடியாக அவர்களை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என
புதிதாக பதிவேற்றுக்கொண்ட வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் தர்மராஜன் அதிரடி பேட்டி
