2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் முன்னேற்ற கட்சி 15 தொகுதிகளில் தனித்து போட்டி என மாநில துணை பொதுச் செயலாளர் தங்கவேல் சுப்பையா பேட்டி.

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் மக்கள் முன்னேற்ற கட்சி 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக, மதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில துணைப் பொதுச்செயலாளர் தங்கவேல் சுப்பையா தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் தலைவர் முத்துசாமி , பரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். மற்றும் இந்தக் கூட்டத்தில் பெண்கள் உட்பட மதுரை மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய மாநில துணை பொதுச் செயலாளர் தங்கவேல் சுப்பையா,

தமிழகத்தில் மக்கள் முன்னேற்ற கட்சி எந்த எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்றும் , எந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் என்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, சென்னை ,காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் 40 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், அதில் 15 தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாகவும் மேலும் அடுத்து நெல்லையில் நடைபெறும் செயற்குழுவில் வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விபரம் மற்றும் மற்ற தொகுதிகளில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.