30 ஆண்டு பழமையான ஆவடி தோப்பு ஸ்ரீ ஓம் சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரத்திற்கு உட்பட்ட தண்டபாணி கோயில் தெரு 2-ல் அமைந்துள்ள 30 ஆண்டு பழமையான ஆவடி தோப்பு அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மேலும் இந்த மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மங்கள இசை முழங்க, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து நாகசாலை அமைக்கப்பட்டு, விழாவை ஒட்டி பல்வேறு ஆன்மிக மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

பின்னர் பல்வேறு புண்ணிய திருத்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், கோபுரத்தின் மீது அமைக்கப்பட்ட கலசங்களில் ஊற்றப்பட்டு, ஸ்ரீ ஓம் சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்பு கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர் பொதுமக்கள், விழா குழுவினர் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.