
1973-ல் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை அரசினர் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலாஜி முன்னிலையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. பள்ளி வளாகங்களில் வேம்பு, புங்கை, நாவல் போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டு, அவற்றை முறையாகப் பராமரிக்க உறுதிமொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பின்னர் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தவும், காற்று மாசுபாடு, பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற பெரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாணவர்களுடன் ஆசிரியர்களும் உறுதி மொழி ஏற்றனர். இந்த நிகழ்வில் பி டி ஏ தலைவர் முத்தையன், உதவி தலைமை ஆசிரியர்கள் அறிவழகன், இராமசாமி ,கருணாமூர்த்தி மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தணிகைவேல் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
