150 ஆவது நாளை முன்னிட்டு பெண்ணாகரத்தில் பசி போக்கும் கரங்கள் கேக் வெட்டி கொண்டாடினர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் ஆதரவற்றோரின் பசியைப் போக்கும் உன்னதசேவையை வழங்கி வரும் பசி போக்கும் கரங்கள்’ அமைப்பு சேவையின் 150 ஆவது நாளை கேக் வெட்டி கொண்டாடினர். மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் பெண்ணாகரம் பசி போக்கும் கரங்கள் அமைப்பு, ஆதரவற்றவர்கள் மற்றும் சாலையோர மக்களுக்குத் தொடர்ந்து உணவு வழங்கும் தன்னலமற்ற சேவையில் 150 ஆவது நாளை எட்டியுள்ளது. பசியால் வாடும் ஏழை எளிய மக்களின் வயிறார உணவளித்து வரும் இந்த அமைப்பின் சேவையானது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை உற்சாகமாகக் கொண்டாடினர். இத்தனை நாட்களாக தங்களது கரங்களால் உணவு தயாரித்து வழங்கும் உறுப்பினர்களுக்கும், நிதியுதவி மற்றும் பிற வழிகளில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நல்ல உள்ளங்களுக்கும் ‘பசி போக்கும் கரங்கள்’ அமைப்பின் நிர்வாகிகள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும், இந்த சேவைப் பயணம் தொடர வேண்டும் என்பதே அனைவரின் ஒற்றை விருப்பமாக உள்ளது.