ராயக்கோட்டையில் பகலில் பனி மூட்டம், கடுங்குளிர் மக்கள் அவதி


கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் ஊட்டிக்கு இணையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் காய்கறிகள், மலர்கள் தரமானதாக விளைச்சலை தருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் இப்போது பெய்து வரும் மழை கனமழையாக பெய்யாமல், தூரல் மற்றும் சாரல் மழையாக மட்டுமே பெய்வதால் பனி மூட்டம் அதிகரித்ததாக கூறுகின்றனர். முன் கூட்டியே பனி இறங்கினால் மழை வராது என்று கூறுகின்றனர். பகலிலேயே பனிமூட்டம் நிலவுவதால் குளிரும் அதிகமாக உள்ளது. அதனால் மக்கள் பகலில் வெளியே வரும் சமயங்களிலும் மப்ளர் மற்றும் சொட்டர் அணிய வேண்டியுள்ளது. ராயக்கோட்டைக்கு வரும் மக்களை வரவேற்கும் சிவதூருவாசர் மலை பனிப்பொழிவால் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.