ம
ராயக்கோட்டை பூ மார்க்கெட்களில் பூக்களின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாக முகூர்த்தங்கள் போன்றவை நடை பெறாததால் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்தன.
இந்நிலையில் இப்போது முகூர்த்தங்கள் போன்றவைகளுடன் ஐயப்ப பக்தர்களின் பூஜைகளால் பூக்களின் விலை அதிகரித்து வருகின்றன.
கடந்த நாட்களில் கிலோ சாமந்திப்பூ ரூ.50 முதல்.ரூ.100 வரை விற்பனையானது. ஆனால் இன்று கிலோ ரூ.160 வரை விற்றது. அதேப்போல மீராபால் என்னும் பட்டன் ரோஸ் கிலோ கடந்த நாட்களில் ரூ.60 முதல் 80 வரை விற்றது. அதுவும் இன்று கிலோ ரூ.120 க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ராயக்கோட்டையில் முகூர்த்த நாட்களால் பூக்களின் விலை அதிகரிப்பு
