மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியில் 300 ஏழை எளிய கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

22.11.2024

இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், புதுமைப்பெண் திட்டம் தமிழ்புதல்வன் திட்டம் பள்ளிகளில் காலை உணவு திட்டம் போன்ற சிறப்பு திட்டங்கள் மூலமாக இந்தியாவில் ஏன் உலகளவில் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி வருபவர் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான், அவர் வழியில் விளையாட்டுத்துறையிலும் தமிழ்நாட்டை முன்மாதிரியாக மாற்றி வருபவர் நமது மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தான் அதுபோல் இராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சிக்கு இராஜபாளையம் PACR அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தும் திட்டம் இணைப்புச்சாலை திட்டம் புதிய வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் இரயில்வே மேம்பாலத்திட்டம் என அனைத்து திட்டங்களும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம் ஆகும் எனக்கூறினார் அதனைத்தொடர்ந்து பேசிய MLA அவர்கள் கர்ப்பிணி பெண்கள் அனைவரும் தங்களது மாமியார் மாமனார் அவர்களை சொந்த அப்பா அம்மா வாக பார்க்க வேண்டுமெனவும் அப்போதுதான் மகிழ்ச்சி வீட்டில்தொடரும், இந்தநேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பது அவசியம் எனவும் யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைக்க வேண்டுமென எனக்கூறினார் மேலும் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் துணை முதலமைச்சர் அவர்கள் கூறியதுபோல் பிறக்கபோகும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டுமென MLA அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் தொகுதிபார்வையாளர் நல்லசேதுபதி பேரூர் சேர்மன்கள் பாலசுப்பிரமணியன் ஜெயமுருகன் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி நகராட்சி துணை சேர்மன் கல்பனாகுழந்தைவேலு மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்த் மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் ராதா கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் குழந்தைவேலு மாரிமுத்து, சுரேஷ் குமார், பாரத்ராஜ் ஜெயந்தி ராஜசோழன் பிரபு அர்ச்சனா பொன்னுத்தாய் செந்தில் சுகுமார் மனோ குருசாமி உதயசூரியன் நாகேஷ்வரன் மாயாவிமுருகேசன் ராம்நாத் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.