யூடியூப்பர் கார்த்திக் மீது தஞ்சை எஸ்.பி.யிடம் புகார்
த
குறிஞ்சி நில மக்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பேசிய
தி கே டிவி யூடியூப்பர் கார்த்திக் மீது தஞ்சை எஸ்.பி.யிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத்திடம் குறிஞ்சி நில மக்கள் முன்னேற்றக் கழகம் பொருளாளர் நீலமேகம், அவைத் தலைவர் ராமசாமி, இணைச் செயலாளர் கண்ணன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 3-ம் தேதி தி கே டிவி யூடியூப் சேனலில் கார்த்திக் என்பவர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவில் நடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை வழக்கில் எங்களது சாதியான குறவன் (எஸ்.சி.எஸ்.டி. உட்பட 34 ) இது சாதியை சொல்லி, இழிவாக பேசி, அவதூறு பரப்பி உள்ளார் கார்த்திக்.
மேலும் குறவன்
இனமக்கள் கொள்ளை, கொலை செய்பவர்கள். பிறவிலேயே வழிப்பறி திருட்டு செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் என்று கார்த்திக் பேசியுள்ளார். இதனால் எங்கள் இன மக்களுக்கு அதிக இழிவு ஏற்பட்டுள்ளன.
இதனால் நாங்கள் சமூகத்தில் நன்மதிப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். குறிப்பாக எங்கள் இளைய தலைமுறை மக்கள் வளர்ந்து வரும் இந்த காலத்தில் எங்களுடைய வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இப்படி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் கார்த்திக் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிஞ்சி நில மக்கள் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
எங்கள் இனமக்கள் கல்வி, பொருளாதாரம், அரசு வேலை வாய்ப்புகளில் தற்போது தான் சமநிலையில் வளர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் எங்கள் சமூக மக்களை இழிவாக பேசி அவதூறு பரப்பும் செயலை கார்த்திக் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
எனவே கார்த்திக் மீது தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு காவல்துறை மூலம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற அவதூறுகளை பரப்பி வரும் சமூக வலைதளங்களை அரசு உடனே தடை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.எங்கள் இன மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக சாதி சான்று வழங்க வில்லை. இதனால் எங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு சிரமமாக உள்ளது. எதிர்கால தலைமுறை கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. எனவே எங்களுக்கு என்று தனியாக சாதி சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் குறிஞ்சி நில மக்கள் முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
