வாடகை கடைகளுக்கான 18 சத ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்!தஞ்சையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

வாடகை கடைகளுக்கான 18 சத ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்! ஒன்றிய-மாநில அரசுகளை வலியுறுத்தி தஞ்சையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

       கடை வாடகை மற்றும் கட்டிடங்களுக்கான அநியாய ஜி எஸ் டி 18% வரி விதிப்பை ரத்து செய்ய ஒன்றிய-மாநில அரசுகளை வலியுறுத்தி தஞ்சையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு தஞ்சை மாவட்ட தலைவர்                        ஆர். சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது.   

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்டச் செயலாளர் ஏவிஎம்.ஆனந்த், மாவட்ட பொருளாளர் ஆர்.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் தஞ்சை மாநகரச் செயலாளர் ஆர்.ஜெயக்குமார் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் வாடகை கடை மற்றும் கட்டிடங்களுக்கான ஒன்றிய அரசு விதித்துள்ள 18% வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும், வணிக கட்டிடங்களுக்கு ஏற்கனவே 100% வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஆண்டுதோறும் 6% சொத்து வரி விதிக்கும் உயர்வை திரும்ப பெற வேண்டும், வணிக உரிமை கட்டணம் மற்றும் தொழில் வரிகளின் உயர்வை திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாடு வணிகர்கள் மீது ஒன்றிய அரசு திணிக்கின்ற நியாயமற்ற ஜிஎஸ்டி வரி விதிப்பை கைவிட வேண்டும், வணிகர்களிடம் சோதனை என்ற பெயரில் வருவாய்த்துறை, உணவுத்துறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் அநியாய அபராத கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும், மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களில் குப்பை வரியை மாநிலம் முழுவதும் சீராக்க வேண்டும், வணிக உரிமம் புதுப்பித்தலை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும், மாதா, மாதம் மின் கட்டணம் செலுத்தும் வசூல் முறையை கொண்டு வர வேண்டும், திருமண மண்டபங்களில் தனியார் வணிகத்தை அனுமதிக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், தமிழ்த் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் நா.வைகறை, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் இரா.நந்தகுமார், கே. சண்முகராஜ், எஸ். கோவிந்தராஜ், தியாக சுந்தரமூர்த்தி, டி.தாமரைச்செல்வன், என்.வெங்கடேசன், ஏ.என்.ஜெயராமன், ஜி.குமார் இணைச்செயலாளர்கள் எம்.கந்தசாமி, தங்க.கார்த்திக், சைவ.வரதராஜன், ஆர்.ரகுபதி, ஜி பாலு, எம்.ஜி.ராஜசேகர், துணைச்செயலாளர்கள் எ.ராமலிங்கம், ஏ.பாலசுப்பிரமணியன், சிவா,கண்ணன், கே.முருகானந்தம், ரங்கராஜ், இளைஞர் அணி அமைப்பாளர்கள் மணிகண்டன், விக்னேஷ், குமார், ஜாபர் சாதிக்,முகிலன், ராமன், தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் த.ஜெயக்குமார், அலெக்ஸ்,ரமேஷ், விவேக்,தங்கம்மாள், செய்தி தொடர்பு பிரிவு நிர்வாகிகள் டாக்டர் ஆர். மணிகண்டன், முகமது இப்ராகிம், ராஜா,குமார் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் வி.பி.டி.வெங்கட்ராமன், ரியாஸ், நந்தகுமார், கோபி உள்ளிட்டோர் உள்ளிட்டு ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் எலக்ட்டிரீசியன் ரமேஷ் நன்றி கூறினார்.

செய்தி…ஏ.ககே.சுந்தர். தஞ்சாவூர்.