திருவாடானை தொகுதியை குறி வைக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

ராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் அறிவுறுத்தலின்படி கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜன.1 முதல் 10 வரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி
ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகாதிக்குட்பட்ட எஸ்.பி.பட்டிணத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருவாடானை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் முகமது ஹனீப் தலைமை வகித்தார்.தொகுதி செயலாளர் பனைக்குளம் ஹமீது இபுறாஹீம் முன்னிலை வகித்தார்.மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சோழந்தூர் அப்துல்லாஹ் அனைவரையும் வரவேற்று பேசினார்.எஸ்.பி.பட்டிணத்தை சேர்ந்த இளைஞர்கள்,பொதுமக்கள் ஏராளமானோர் தன்னார்வத்தோடு தங்களை எஸ்.டி.பி.ஐ கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் கூறுகையில்:-

எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திருவாடானை சட்டமன்ற தொகுதியை எதிர்நோக்கி எஸ்.டி.பி.ஐ கட்சி என்ற இலக்குடன் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறோம்.கிழக்கு மாவட்டம் முழுவதும் ஏராளமான மாற்றுக் கட்சியினர்,பொதுமக்கள் உட்பட இளைஞர்கள் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர்.திருவாடானை தொகுதியை எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோட்டையாக மாற்ற இந்த தீவிர உறுப்பினர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது.எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.