
திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான எருது விடும் திருவிழா பொங்கல் திருநாளில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது.
இதில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொள்கின்றன.
இதில் பல ஊர்களில் பல கிராமங்களில் முதல் பரிசை தட்டிச் செல்லும் வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஒத்த கொம்பு காளை இறந்துவிட்டது.
இதனால் கந்திலி அம்பேத்கார் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஜே.ஆர் பிரதர்ஸ் வாணியம்பாடி ஒத்த கொம்பு காளைக்கு ஈமச்சடங்கள் செய்து கந்திலி பகுதியில் பேனர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதில் கந்திலி மேற்கு ஒன்றிய இளைஞரணி பாசறை செயலாளர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
