கடந்த கால குறைகளை சரிசெய்து கட்சிப் பணிகளை முன்னெடுத்து செல்வேன்-எஸ்.டி.பி.ஐ கிழக்கு மாவட்ட தலைவர் பேட்டி!!!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட பெரியபட்டினம் ரியாஸ்கான் கட்சியில் கடந்த காலங்களில் நடந்த குறைகளை சரிசெய்து கட்சிப் பணிகளை முன்னெடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்திற்கு மாவட்ட தலைவராக மீண்டும் என்னை தேர்வு செய்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில நிர்வாகத்திற்கும்,பரிந்துரை செய்த மாவட்ட நிர்வாகத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.என் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயமாக நான் காப்பாற்றுவேன் என்றும்,கடந்த காலங்களில் நடந்த குறைகள் அனைத்தையும் சரி செய்து கட்சிப்பணிகளை முன்னெடுத்து செல்வேன் என்றும் அனைவரையும் அரவணைத்து அனைவரின் ஒத்துழைப்போடும் கட்சியை வழிநடத்துவேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.எப்போதும் உங்களின் ஊக்கமும்,ஆக்கமும்,சுட்டிக்காட்டுதலும் தொடர வேண்டும் என்பதையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு நேரிலும்,அலைபேசியிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்த எஸ்.டி.பி.ஐ கட்சி அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.