ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை ஊராட்சி ஒன்றியதுவக்க பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

நாளை பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோலாகலமாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது நாளை பொங்கல் தினத்தை முன்னிட்டு பள்ளியில் இன்று மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது இதில் ஊட்டமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கூத்தரசன் தலைமையில் பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்த பொங்கல் விழாவில் உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் ரேவதி மணிமேகலை அஞ்சலி இன்பன்டா மேரி மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.