ஜனவரி மாதம் முழுவதும் சாலை பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருவதையொட்டி தமிழக முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே பென்னாகரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பென்னாகரம் உதவி கோட்ட பொறியாளர் விஜய் தலைமையில் நடைபெற்றது இந்த பேரணியானது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே தொடங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கடைவீதி, பேருந்து நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வழியாக நாகமரை நான்கு ரோடு சந்திப்பு வரை பேரணியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வசனங்கள் அடங்கிய பதாகைகளுடன் நடந்து சென்று பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியில் தலைக்கவசம் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கக் கூடாது, வாகனங்களை அதிவேகமாக இயக்கக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது, கனரக வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் 40 க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பேரணியாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தப் பேரணியில் உதவி பொறியாளர் சிங்காரவேலு சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் பேரணியாகச் சென்று பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
