வீட்டு அருகே வந்து அசிங்கம் பண்றாங்க. எங்களுக்கு ஒயின்ஷாப் வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மக்கள்!. அவதி குறித்து மக்கள் பேசி கொண்டு இருந்த போது 1 நாளைக்கு 4 குவாட்டர் குடிக்கிறேன் நான் எங்க போறது…. ஒயின்ஷாப் எடுக்க கூடாது என்று குறுக்கே நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. அந்த இடத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,

மதுபான கடையில் வாங்கி வரும் மது பாட்டில்களை வீட்டு அருகே வந்து குடித்துவிட்டு அங்கேயே பாட்டில்களை வீசித் செல்வதாகவும், அதே இடத்தில் சிறுநீர் கழிப்பதாகவும் மதுபான கடையால் மிகவும் சிரமப்பட்டு வருவதால் அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள மக்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாளில் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்கள் அப்பகுதி மக்களின் நிலையை அறிய சென்ற நிலையில் அப்பகுதியில் உள்ள பெண்கள் இங்கு மதுபான கடை இருப்பதால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் குடித்து விட்டு வீட்டு எதிரில் பெண்கள் இருப்பது கூட தெரியாமல் சிறுநீர் கழித்து செல்கின்றனர்.

இதனால் நாங்கள் மிகவும் மன வேதனை அடைகிறோம் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மீசைக்கார நபர் ஒருவர் குறுக்கே வந்து ஒரு நாளைக்கு நான் நாலு குவாட்டர் குடிக்கிறேன் இங்க இருக்கும் ஒயின்ஷாப்பை எடுத்து விட்டால் நான் எங்கே போவது என்று பேசி கடையை எடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அவரை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தனர்.

அதேபோன்று ஒய்யாரமாக இருந்த மற்றொரு மதுப்பிரியர் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் முதலில் ஒயின்ஷாப் எடுக்க கூடாது என்று பேசியவர் பெண்கள் பேசும் ஆவேச பேச்சை கண்டு மதுபான கடையை அகற்றி ஆக வேண்டும் என்று பேசினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.