
வீடுகள், தொழில்துறை மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான அணைத்து வகை சோலார் கட்டமைப்புகள் குறித்த 2 நாள் கண்காட்சி, கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் கோலாகலமாக துவங்கியது.
இ.கியூ. மேக் ப்ரோ’ மற்றும் ‘சி 2 ஜி’ நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த ‘குளோபல் சோலார் கண்காட்சி’ மற்றும் கருத்தரங்கு மேற்கு தமிழகத்தின் மிகப்பெரிய சோலார் கண்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் சோலார் தகடுகள் உற்பத்தியாளர்கள், சோலார் இன்வர்ட்டர் மற்றும் பேட்டரி தயாரிப்பு நிறுவனங்கள் உள்பட ஒட்டுமொத்த சோலார் துறை சார்ந்த நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை காட்சி படுத்தியுள்ளனர். செப்டம்பர் 11, மற்றும் 12 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இந்த நிகழ்வை இந்திய சோலார் சங்க தலைவர் நரசிம்மன், நிகழ்ச்சியின் அமைப்பாளர் ஆனந்த் குப்தா மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
75க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் தங்கள் தயாரிப்புகளை காட்சி படுத்தி உள்ளனர். இதில் அதானி சோலார், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஸ்பார்க் நிறுவனம், பானாசோனிக், ஹாவல்ஸ் , பொலிகாப் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களும் தங்களது ஸ்டால்களை அமைத்து தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். சூர்யகான் எனும் பெயரில் நடைபெறும் சோலார் தொடர்பான கருத்தரங்கில், 50க்கும் அதிகமான துறைசார்ந்த வல்லுநர்கள் சோலார் மின் உற்பத்தி மற்றும் இத்துறையின் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்று கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
