திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காவல்துறையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை பாய்ச்சல் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் தமிழரசன் என்ற இளைஞர், விற்பனை நோக்கத்தில் கஞ்சா வாங்கி வந்து, ஜோலார்பேட்டை பார்சம்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகிலுள்ள மறைவான இடத்தில் பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில், திருப்பத்தூர் டிஎஸ்பி சௌமியா தலைமையிலான தனிப்படை ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமாக இருந்த தமிழரசனை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது பையில் சோதனை செய்தபோது, விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
அதை காவல்துறையினர் பறிமுதல் செய்து, தமிழரசனை ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

