
பென்னாகரம், –
தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டி முடிக்கப்பட்ட திட்ட பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு .க ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் ஊட்டமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் நபார்டு திட்டத்தின் மூலம் 94 . 24 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இதனை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் மு .க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. கே மணி எம்.எல்.ஏ குத்துவிளக்கு ஏற்றி பள்ளிக்கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார்.இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி உதவி தலைமை ஆசிரியர் கருணாமூர்த்தி மற்றும் பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார் ஒன்றிய செயலாளர் முருகன் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதேபோல் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேகாரஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலமரத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் புதிய கட்டிடங்கள் காணொளி வாயிலாக திறக்கப்பட்டது .
