
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நம்பர் 22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியில் இருந்து ரூபாய் 12 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் தடாகம் சாலை முதல் தண்ணீர் தொட்டி வரை உள்ள மாரியம்மன் கோவில் வீதி சாலை அமைக்கும் பணிகளை கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தார்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நம்பர் 22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் தடாகம் சாலை முதல் தண்ணீர் தொட்டி வரை உள்ள மாரியம்மன் கோவில் வீதி சாலை பழுதடைந்திருந்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியில் இருந்து ரூபாய் 12 லட்சத்து 39 ஆயிரம் ஒதுக்கீடு செய்து சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த சாலை அமைக்கும் பணிகளை கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, முன்னாள் ஊராட்சி தலைவர் வி கே வி சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, ஒன்றியச் செயலாளர் சி எம் குமார், நஞ்சுண்டாபுரம் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் திருநாவுக்கரசு, டி டி எஸ் மூர்த்தி, ஆனந்த், முன்னாள் கவுன்சிலர்கள் குமாரசாமி, நாகராஜ், அருண், ஒப்பந்ததாரர் சசிக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நம்பர் 22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தடாகம் பாப்பநாயக்கன்பாளையம் அருள்மிகு முனியப்ப சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார். அவருக்கு கோவில் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் தரிசனம் செய்தார்.
