
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்
ரூ.567.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படும்
மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் VVPATS ஆகியவற்றை சேமிப்பதற்காக கிடங்கை அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.
நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ. வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
உடன் இந்த நிகழ்ச்சியின் போது திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
