
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் பிரதான சாலையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், மாவட்ட தலைமை நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட 9 நீதிமன்றங்கள் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் காலை 9 மணி அளவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக இமெயில் மூலம் நீதிமன்ற மின்னஞ்சல் முகவரிக்கு மிரட்டல் வந்துள்ளது.
இதனை அடுத்து நீதிபதிகள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பெயரில் திருப்பத்தூர் நகர போலீசார் மற்றும் க்யூ பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அதன் பின்னர் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து தற்போது நீதிமன்ற வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதற்கு முன்னதாக போலீசார் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த அலுவலகப் பணியாளர்களை அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
